Close
Tusa Trust

வானமே நம் எல்லை
மனம், வார்த்தைகளால் ஆனது. எண்ணங்களால் நிரம்பி வழிவது. விருப்பு, வெறுப்பு என்னும் அசைவுகளாய் எழும்பி அலைபாய்வது.

மனத்தில் பதிவாகியுள்ள இந்த வார்த்தைகளில் சில வார்த்தைகள் பிடித்தவை Positive Recordings. சில பிடிக்காதவை Megative Recordings.

சின்ன வயதில், காமாட்சி என்ற பெயரில் ஒரு கொடுமைக்காரச் சித்தி இருந்தார்கள் எனவே, காமாட்சி என்ற பெயரை எங்கே பார்த்தாலும், கேள்விப்பட்டாலும் சித்தி நினைவு வரும். கடுப்பாய் இருக்கும், ஏனெனில், அது பிடிக்காத பதிவுப் பகுதியில் இருந்தது.

இளமைப் பருவம் வந்தது. உயிருக்குயிராய் நேசிக்கும் தாதலி ஒருத்தி வாய்த்தாள். அவள் பெயரும் காமாட்சி. இப்போது, அந்தப் பெயரை எங்கு கேட்டாலும், எப்போது கேட்டாலும் இன்பமாய் உள்ளது. மனம், அந்தப் பெயரை மந்திரம்போல் விடாமல் உச்சரிக்கிறது. காமாட்சி மளிகைக் கடை... காமாட்சி துணிக்கடை... காமாட்சி உணவகம்... ஊரில் காமாட்சி என்ற பெயரில் இருக்கும் அத்தனை நிறுவனங்களும் மனத்தில் அத்துப்படி. அவையெல்லாமே பிடித்த நிறுவனங்களாகிவிட்டன.

என்ன ஆயிற்று? காமாட்சி என்ற பெயர், பிடித்தமான பதிவாகிவிட்டது. Just it comes on the Positive side.

நாளையே காதலி கைவிட்டு விட்டல், காமாட்சி மீண்டும் பிடிக்கவே பிடிக்காத பதிவாகிவிடும்.

ஆம்... மனம், வார்த்தைகளால் ஆனது. எண்ணங்களால் நிரம்பி வழிவது. அவற்றுள் சில பிடித்தவை, சில பிடிக்காதவை.

நம் மனத்துள் சுழலும் எண்ணங்கள் இப்படி வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டால், விருப்பு-வெருப்புகளை வெல்லும் ஆற்றல் வரும், மனம், வெட்டவெளி ஆகிவிடும். அதன்பிறது, நாம் எதையும் சாதிக்கலாம். ஏனெனில், நாமேல்லாம் போற்றும் இறைவன், அந்த நிலையில்தான் தமிழ்மறை கூறுகிறது.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சோந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல - 4

இந்த இறைநிலை வாய்த்த பிறகு, ஏது அச்சம்? எது துன்பம்? எங்கே அவநம்பிக்கை? இருக்குமோ, அறியாமை இருள்?

மனம் ஒரு கணினி. மூளையே அந்தக் கணினியின் பதிவுத்தட்டு - Computer disc or Floppy. எனவே மனம், மூளைக்கு உள்ளே இல்லை மூளையை மையமாய் வைத்து வானளாவிய உயரத்திற்கு விரித்து கிடக்கிறது.

கணினித் தட்டின் - Computer Disc - ஆற்றல் அளவைப் பொறுத்தது - 256 bites... 512 bites - ஒரு குறிப்பிட்ட உயரம்வரை பதிவுகள் இருக்கும் ஆனால், மூளை என்ற கணினிக்கோ வானளாவிய உயரத்திற்குப் பதிவுகள் இருக்கும். ஆம், வானமே நம் எல்லை.

வானளாவிய இந்தக் கணினியை வயப்படுத்துவதற்கு, ஆயிரக் கணக்கான நட்பங்கள் உள்ளன. அவற்றுள் சில நட்பங்களை மட்டும் இந்தச் சிறிய நூலின் வழி பகிர்ந்துள்ளே்ன. அந்த நுட்பங்களைப் பயன்படுத்தி வளர்ந்த கவனகக் கலை பற்றியும், கவனகக் கலைஞர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.

முதலில் உங்கள் மனத்திரை வெட்டவெளி ஆகட்டும். பின்பு, நூல் வடிவில் வழங்கியுள்ள இந்த அறிவுநிதி - உங்களுக்குப் பயன்தரும் என்று நம்புகிறேன்

இந்நூலில் இடம்பெற்றுள்ள மனம் நம் வேலைக்காரன் கட்டுரையை வெளியிட்ட குமுதம் இதழுக்கு நன்றி

அன்பன்,
இரா. கணகசுப்புரத்தினம்
பதினாறு கவனகர்

---------------------------------------------------------------------------------------------------------------------------------


Thirukkural with English couplets

திருக்குறல் ஒரு வாழ்க்கை நூல், சமுதாய வாழ்க்கை றையை வடிவமைத்து எழுதப்பட்ட வாழ்வியல் கோட்பாடுகளே குற்டபாகக்ள. ஒவ்வொரு குறள் கோட்பாட்டையும் நம் வாழ்க்கையுடன் பொருத்திப் பாத்து, நம்மை நாமே சரிசெய்துகொள்ள உதவும் ஒப்பற்ற அறநூல்.

திருக்குறள் ஓர் இன மீட்பு நூல், தமிழன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் - தமிழர்கள் ஒருவரை ஒருவர் இனம் கண்டு இணையவும் உதவும் இனமீட்புநூல்.

சாதி, சமய, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, மனித நேயம் காக்கும் உலகப் பொதுமறை.

திருக்குறளுக்கு ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட் ஆங்கில மொழிபெயாப்புகள் வெளிவந்துள்ளன. அவற்றுள், கவியோகி சுத்தானந்த பாரதி அவாகளின் மொழி பெயர்ப்பே சுருக்கமாகவும், எளிமையாகவும், இனிமையாகவும், செய்யுள் வடிவிலும் திகழ்வதாய்க் கருதுகிறோம்.

தொட்டனைத்து ஊறும் மணற்கேணிமாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு - 396
எனும் குறளினை,

As deep you dig the sand spring flows
As deep you learn the knowledge grows

என மொழி பெயாத்திருக்கும் அருமையும்-
உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு - 1122
எனும் குறளினை

Love between me and this lady
is like bond between soul and body

என மொழி பெயாத்திருக்கும் அழகும் பானைச் சோற்றைப் பதம் பார்க்க உதவும் இரண்டு பருக்கைகள்.

மொழி நலம், இன நலம் பேணுவோ. ஒருமித்த குரலாய் ஒலிக்கும் வண்ணம், உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டு இயக்கமாய் மாணவா நகலகம் அய்யா நா. அருணாசலனார் அவர்களை நிறுவனராய்க் கொண்டு விளங்கும் தமிழ்ச் சான்றோர் பேரவை தமிழ் மறையின் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பைத் திருத்தமாய் வெளியிட்டுப்பெருமை சேர்த்தது.

தமிழ் மறையை உலகம் முழுவதும் பரப்பும் பெரும்பணியை மேற்கொண்டிருக்கும் பதினாறு கவனகர் திருக்குறள் இராம. கனகசுப்புரத்தினம் கவனகர் முழக்கம் மாத இதழின் சார்பில் இந்நூலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

அன்புடன்
கவனகர் முழக்கம் ஆசிரியர் குழு

------------------------------------------------------------------------------------------------------------------------------------கேட்டதும் கிடைத்ததும்

நுழைவாயிலில் சில நொடிகள்....


இந்நூல், திருக்குறள் பற்றிய ஆராய்ச்சி நூல் அல்ல்; திருக்குறளின் உயிர்ப்பை உணர்ந்துகொண்ட ஒருவரின் அனுபவப் பகிர்வு மட்டுமே.

எம் தந்தையும், தமிழகத்தின் பதின்கவனகரும், தமிழ்நாடு அரசின் அரசவைக் கலைஞராய் விளங்கயவருமாகிய திருக்குறள் பெ. இராமையா என்ற சான்றாண்மைத் தங்கம் வாகை்கைத் தீயில் தம்மைப் புடம்போட்டுப் பார்த்து வெளிப்படுத்திய அறிவுச் சுடர்க் கதிர்களே இந்நூலில் மிளிர்கின்ற சொற்கள்.

கண்பார்வை தெரியும்வரை தாய்நாட்டை மீட்கும் விடுதலை வீரராய்த் திகழ்ந்து, கண்பார்வையை இழந்த நிலையிலும் மன உறுதியை இழக்காமல் முப்பது ஆண்டுகள் பதின்கவனகம் (தசாவதானம்) என்னும் நினைவாற்றல் கலையை மையமாக வைத்துத் தமிழுக்கும் திருக்குறளுக்கும் தொண்டாற்றிய அந்தப் பயன்மரத்தில் பழுதற்ற, சுவையுள்ள பழங்களே இந்நூலில் பயிலும் கருத்துகள். வாய்மை, இன்னாசெய்யாமை (சத்தியம், அகிம்சை) என்ற இரண்டு பண்புகளை மட்டுமே தம் உயிர்க் கொள்கைகளாய் ஏற்று, வாழ்ந்துகாட்டி, அந்த வாழ்க்கைச் சோதனையில் வெற்றி பெற்ற காந்தி அடிகள் தம் வாழ்க்கை வரலாற்றுக்குச் சத்திய சோதனை என்று பெயர் இட்டார்.

ஏறத்தாழ இதுபோன்றதொரு சோதனையைத் தம் வாழ்வில் மேற்கொண்டார், எம் தந்தை திருக்குறள் பெ. இராமையா. கண்பார்வை இழந்த நிலையில், திருக்குறளை மட்டும் நம்பி அது காட்டும் உயர்ந்த நெறிப்படி வாழந்து கார்த்தால் வாழ்வில் வெற்றி காணமுடியுமா, முடியாதா? என்பதை அறிவதுதான் அந்தச் சோதனை. வாழந்து பார்த்தார் எதிர்பார்த்ததைவிட மாபெரும் வெற்றியைப் பெற்றார் அந்த வெற்றியை உங்களுக்குச் சொல்ல வேண்டாமா? அந்த முயற்சியின் முதல் வெளிப்பாடே இந்நூல். இந்நூலின் முழுமுதல் நோக்கம், மாந்த இனம் முழுவதையும் திருக்குறள் நெறிக்கு ஆற்றுப் படுத்துவதே திருக்குறள் ஓர் அகக் கண்னாடி. உயர்ந்த தெய்வ நிலையில் உள்ளவாகளையும், ஆகக் கயவர்களையும் விருப்பு வெறுப்பின்றி உள்ளது உள்ளபடியே காட்டும் ஆற்றல் உடையது. முகம் காட்டும் கண்ணாடியைப் பார்த்து நம் முகத்தை அழகு படுத்திக் கொள்வதுபோல் நம் மனத்தை இந்த அகக் கண்ணாடியின் வழியே காத்த்து நம்மை நாமே யார் என்று புரிந்துகொணடு, நம்மைச் சீர் செ்யது கொள்ளலாம்.

இன்னும் இதை இந்த நூற்றாண்டுப் பாணியில் சொன்னால், மனித வாழ்க்கையை அறிவுபூர்வமாய் ஆராய்ச்சி செய்து வடிவமைக்கப்பெற்ற ஒரு கணினி (கம்ப்யூட்டர்) அமைப்பே திருக்குறளின் அமைப்பு. இந்தக் கணினியுள் நம் இயல்புகளைப் புகுத்தி அதாவது Programme செய்து பார்த்து விடையைப் பெற்றால் அந்த விடை நாம்-

முதல் அதிகாரத்தின்படி ஆதிபகவன் நிலை எய்தியுள்ளோமா?

3 ஆம் அதிகாரமாகிய நீத்தார் பெருமையின்படி ஞானியாய் வாழகிறோமா?

5 முதல் 24 வரையுள்ள இல்லறவியலின்படி நல்ல குடும்பத் தலைவனாய் வாழ்கிறோமா?

100 ஆம் அதிகாரத்தின்படி பண்பாளனாய் வாழ்கிறோமா?

99ஆம அதகாரதிதன்படி சான்றோனாய் வாழ்கிறோமா?

103 ஆம அதகார்திதன்படி பொதுநல்த தொணடனாய் வாழ்கிறோமா?

40 முத்ல 43 வரையுள்ள அதகாரங்களின்படி அறிஞனாய் வாழ்கிறோமா?

84 ஆம் அதிகாரத்தின்படி அறியாமையில் இருக்கிறோம் என்பதையே அறியாத பேதையாய் வாழ்கிறோமா?

85 ஆம் அதிகாரத்தின்படி நாம் தான் முழு அறிவாளி மற்றவர்களெல்லாம் அரைகுறைகள் என்று கருதும் முட்டாளாக வாழ்கிறோமா?

108 ஆம் அதிகாரத்தின்படி சமுதாயம் என்ற இயக்கத்தின் (Process) கழிவுநீர்ச் சாய்க்கடை போன்ற கயவனாய் வாழ்கிறோமா?

என்பதைப் படம் பிடித்துக் காட்டுவதாய் இருக்கும்.

எம் தந்தையை வினாக்களால் உரசி, அவர் மாற்றுக் குறையாத பொன் என்று உலகுக்கு உணர்த்தியுள்ள சான்றோர்கள் பலர், இந்நூல் வெளிவர எண்ணத்தால், சொல்லால், ஏன், பொருள் நிலையாலும் துணை நின்றவர்கள். அவர்கள் அனைவர்க்கும் எம் நெஞ்சம் நிறைந்த ந்னிறயைத் தெரிவிக்கிறேன்.

இதிலுள்ள வினாக்கள் பலவற்றைத் குறளியம் இதழில் வெளியிட்டுப் பெருமை செய்த தெய்வத்திரு வேலா அரசமாணிக்கனார் அவர்கட்கு மனம் எனிந்த நன்றி

சில வேளைகளில் பெரிய தங்க நகையின் விலை மதிப்பைக் காட்டிலும், அதன் நடுவில் பதித்த ஒரேயொரு வைரக்கல்லின் மதிப்பு அதிகமாகி விடுவதுண்டு. பெருமைக்குரிய சிலம்பொலி சு. செல்லப்பனார் அவர்கள் அணிந்துரை வடிவில் வழங்கியுள்ள திறனாய்வுரை இந்நூலிற்கு அப்படி அமைந்த தொரு வைரக்கல். அன்னார்க்கு எம் அகம் கனிந்த நன்றி

இந்நூலின்வழி எமக்கு அறிமுகம் ஆகி, தம் வாழ்க்கை ஓடத்தில் எம்மையும் ஏற்றிக்கொண்டு எம் பணி அனைத்திற்கும் துணை நிற்கும் அருளாளர் அடையாறு மாணவர் நகலகம் நா. அருணாசலனார் அவர்களுக்கும், திருத்தமுடன் இந்நூலை அச்சுக்கோப்பு செய்து அடிவமைத்த மாணவர் கணினியகம் கு. நாகராசன் அவர்களுக்கும், செல்வி வெ. சரஸ்வதி அவர்களுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றி

அச்சாய்த் தாங்கியும் ஆரக்கால் உருளையாய் இயங்கியும் எம் முயற்சி அனைத்திற்கும் துணை நிற்கும் இலக்கிய விதிக்கு-சகோதரல் இனியவன், பாவலர் பல்லவன், கவிஞா தாராபாரதி, ஓவியக்கவிஞா மலர்மகன், வள்ளல் ஆனூர் பு. கோ. ஜெகதீசனார் இனிக்கும் வேம்பையன் குடும்பத்தினர் உள்ளிட்ட அதன் அங்கத்திற்கு-எம் பரம்பரையின் நன்றி இனி நீங்கள் நூலிற்குள் செல்லலாம்.

அன்புடன்
இரா. கணகசுப்புரத்தினம்.
பதினாறு கவனகர்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------
இளைஞர்களுக்கு...


முதல் மலர் உங்கள் கைகளில்...

அவர் ஓர் உலகப் புகழ்பெற்ற ஞானி. உலகிலுள்ள அத்தனை நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் செய்தார். அந்தந்த நாடுகிளில் தோன்றிய ஞானிகளின் பெருமைகளையும், அவர்கள் அருளிய மறை நூல்களின் அருமைகளையும் விள்க்கி ஆயிரக் கணக்கான சொற்பொழிவுகள் செய்தார்.

தமிழ்நாட்டில் வந்து இறங்கினார். தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் சில நூல்களின் ஆங்கில மொழி பெயர்புபகள் அவரிடம் வழங்கப்பட்ன. நருந்தவற்றுள் சிறிய நூல் ஒன்றை எடுத்துப் புரட்டினார். இரவு முழுவதும் அதில் ஆழ்ந்திருந்தார்.

மறுநாள் தம் சொற்பொழிவை இப்படித் தொடங்கினார் உலகம் முழுமைக்கும் என் உரை தேவைப்படலாம். தமிழ்நாட்டைப் பொறத்தவரை என் உரை தேவையில்லை என் உரை மட்டுமல்ல வருங்காலத்தில் யாருடைய உரையும் தேவைல்லை. இந்த நூலை நீங்கள் உணாந்து கொண்டாலே போதும். இந்த ஆங்கில மொழிபெயர்ப்பில் உயிர்ப்பில்லை. இதுவே இவ்வளவு ஈர்ப்புடன் இருந்தால். தமிழில் இதன் மூலநூல் எவ்வளவு உயிர்ப்புள்ளளதாய் இருக்கும் என்று வியந்து நிற்கிறேன்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஞானியால் இப்படிப் புகழ்ப்பெற்ற அந்தச் சிறிய நூல். நம் தமிழ் மறையாகிய சிருக்குறள.

இன்றைய அறிவியல் கமூகவியல் நிலைக்கு ஏற்பதத் திருக்குறளின் நுட்பத்தைப் பல்பேறு தலைப்புகளில் களஞ்சியம்போல் வழங்கினால் - இன்றைய தலைமுறைக்குப் பயனாய் அமையுமே, ஐயா அதைச்செய்தால் என்ன? என்றார் மாணவர் நகலகம் திரு. அ. செளரிராசன்.

உடனே அவர்தம் அன்புத்தந்தை மாணவர் நகலகம் திரு. அருணாசலனார் அவர்கள் இது நல்ல திட்டம் இன்றே தொடங்குங்கள் என்று அன்புக் கட்டளையிட்டார்

செல்வத்தைச் சேர்க்கும் அறிவுத் திறமும், அதை முறையாய்ச் செலவு பொறுப்புணர்வும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற பெருமைக்குரியவர் அவர். அறிஞர்களும் கலைஞர்களும் இளைப்பாறும் வண்ணம் அடையாற்றில் இன்னுமோர் ஆலமரமாய்ப் பழுத்துப் படர்ந்திருக்கும் பண்பாளர்.

அவரது கட்டளையை மறுக்க இயலுமா? உடனே செயல்பட்டேன். களஞ்சியத்தின் முதல் நூலாகிய குறளமுதல் இளைஞர்களுக்கு என்னும் இந்த நூலை வடிவமைத்துவிட்டேன்.

இலக்கியவீதி திரு. இனியவன் அவர்கள் படித்து உணர்ந்து பாராட்டினார் திருத்தவேண்டியவற்றைத் திருத்தி மெருகேற்றினார்

அன்பன்
இரா. கணகசுப்புரத்தினம்.
பதினாறு கவனகர்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------


திருக்குறள் உணர்வுரை


ஆழம் காண இயலாத அளிவுச் சுரங்கம்...

திருக்குறள் ஒரு வாழ்க்கை நூல். குறட்பாக்கள் ஒவ்வொன்றும் வாழ்வியல் சூத்திரங்கள்.

கணக்கில், சூத்திரங்கள் உள்ளன. எடுத்துகாட்டு தனிவட்டி I = PNI. அறிவியலில் சூத்திரங்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டு ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த சார்பியல் கோட்பாடு E=MC2.

திருமூலர், பதஞ்சலி முனிவர் கோன்றோர் யோக சூத்திரங்கள் எழுதினர்.

வள்ளுவ மாமுனிவர், வாழ்வியல் சூத்திரங்களை வடிவமைத்துத் தந்துள்ளார்.

இந்த வள்ளுவச் சூத்திரங்களை அவரவர் தம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தம்மைச் சீர்செய்து கொண்டு, வாழ்வாங்கு வாழவேண்டும் நிறைவோடு புவியை விட்டுப் புறப்பட வேண்டும்.

குறட்பாக்களைப் பொறுத்தவரை சொல்லுக்குச் சொல் பொருள் பார்ப்பதும், பொருள் வேறுபாடு குறித்து விவாதம் செய்து கொணடிருப்பதும் தவிர்க்ககப் பட வேண்டும் காரணம்., எந்தச் சொல்லிற்குள் எந்தத் தத்துவத்தைப் புதைத்து வைத்துள்ளார் என்று ஆழம் காண இயலாத வண்ணம், அறிவுச் சுரங்கமாய்த் திகழ்பவை குறட்பாச் சூத்திரங்கள்

எனவேதான். இந்த நூலைப் பொருத்தவரை நான் மூலத்தில் படித்துச் சிந்தித்தவற்றை. அப்படியே உணர்வரையாக வரைந்துள்ளேன்.

திருக்குறள் பற்றி எந்தவித விழிப்புணர்வும் இல்லாத மாணவர்களுக்கும், மற்றைபோர்க்கும் இந்த நூல் கடுகளவு விழிப்புணர்வையாவது தோற்றுவிக்கும் என்றால் அதையே என் முயற்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாய்க் கருதி மகிழ்வேன்

திருக்குறள் உணர்வுரை திருத்தமாய், வெளிவருவதற்கு உதவிய அந்தனை ந்ல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

அன்பன்,
இரா. கணகசுப்புரத்தினம்
பதினாறு கவனகர்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாம்தான் கடவுள் எப்போது....


கவனகர் முழக்கம் காலத்தின் கட்டாயத்தால் நாம் வெளிப்படுத்திய மாத இதழ்.

நீ தொடங்கு மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உணர்த்திய வண்ணம் இறையாற்றல் நம் மென்னியைப் பிடித்து அழுத்தியதால் வேறு வழியின்றி நாம் நடத்தத் தொடங்கிய ஞான வேள்வியே கவனகர் முழக்கம் மாத இதழ்.

நம் இந்திய மண்ணின் அதிலும் சிறப்பாகத் தமிழ் மண்ணின் சிறப்பம்சமே நாளும் அள்ள அள்ளக் குறையாத அதன் ஞானமே. அநத ஞாணம் வறண்டுவிட்டால் இந்த மண் தன் உயிர்ப்பை இழந்துவிடும். அதன் பிறகு, இந்த மண் என்ன, பூமியே இருக்குமா?... என்பது சந்தேகமே.

காரணம், மனித சமுதாயத்தின் ஞானத்திலிருந்துதான் விஞ்ஞானம் பிறக்கிறத. ஞானம் தாய் என்றால் விஞ்ஞானம் அந்த தாய்க்குப் பிறந்த குழந்தை.

ஞானம் திருக்குறள், திருமந்திரம், திருவாசம், திருப்புகழ், திருவருட்பா, தேவாரம் போன்ற திருமறைகளில் கருக்கொண்டுள்ளது. விஞ்ஞானம் அந்தக் கருவிலிரந்து உயிர்க்கின்றது.

சுழன்றும் ஏர்ப்பின்னனது உலகம்... என்கிறத தமிழ்மறையாகிய திருக்குறள். 2036 ஆண்டுகளுக்கு முன்பே, உலகம் சுழல்கின்றது என்ற தத்துவத்தை ஒரு தமிழ் ஞானிதம் திருமறையில் பதிவு செய்து விட்டார் அதைத்தான் ஜியனார்டோ, கலிலியோ கோபர்னிகஸ் போன்ற விஞ்ஞானிகள் 400 ஆண்டுகளுக்கு முன் வெளிப்படுத்தினார்கள்.

உலகின் தலைசிறந்த அணு ஆற்றல் விஞ்ஞானிதான் நம் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராய்த் திகழும் மேதகு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். ஆனால், தம் அறிவு மலர்ச்சியை வெளிப்படுத்திய நூலாக அவர் கூறுவது தமிழ்மறையாகிய திருக்குறளே. ஆக விஞ்ஙானம் ஞானத்தின் வழியேதான் உயிர்க்கிறது என்பதற்கு நம் குடியரசுத்தலைவரின் கூற்றே ஓர் எடுத்துகாட்டு.

ஞானம் என்பது உள் அறிவியல் - Inner Science. விஞ்ஞானம் என்பது வெளி அறிவியல் Outer Science.

ஓர் அற்புதத்தைக் கருவிகளின் வழியே செய்தால் விஞ்ஞானம் அதே அற்புதத்தைக் கருவியகளின் உதவியின்றித்தலையிலுள்ள தத்துவத்தை நேரடியாகப் பயன்படுத்திச் செய்தால் ஞானம். ஞானிகள் கருவிகளின் உதவியின்றிச் செய்து காட்டிய அற்புதங்களை யே பிற்காலத்தில் விஞ்ஞானிகள் கருவிகளின் வழியே செய்து காட்டுகின்றனர்.

பழைய கற்கால யுகம் மடிந்து புதிய கற்காலம் பிறந்தது. புதிய கற்கால யுகம் முடிந்து உலோக காலம் பிறந்தது. உலோக காலம் பிறந்தது. உலோக கால யுகம் முடிந்து அறிவியல் தொழிற்புரட்கி யுகம் பிறந்தது. தொழிற்புரட்கி யுகம் தற்போமின் அணுவியல் எனப்படும் Electronics யுகமாகப் பரினாம வளர்ச்சி பெற்றுள்ளது.

வெளியே நிகழ்ந்துள்ள இந்தச் சமுதாய மாற்றத்திற்கு இணையாக உள் அளிவியலாகிய ஞானமார்க்கத்திலும் பல மாற்றறங்கள் ந்கழ்ந்துள்ளன.

அட்டாங்க யோகம் பயின்று, ஆறு ஆதாரத்தை உணர்ந்து, ஐந்து அவஸ்தைகளைக் கடந்து, கடும் பிரயத்தனத்துடன் தவம் செய்து ஞானம் பெற வேண்டிய கரமச் சித்தர் காலம் என்பது முடிவுக்கு வந்து விட்டது.

நினைக்க... கிடைக்க... என்ற மிகப் பெரிய வாய்ப்புடன் ஞானச் சித்தர் காலம் தொடங்கிவிட்டது. திருமறைகளின் தெளிவும் மகான்கள் மீது சுத்த விசுவாசமும் கொண்டாலே ஞானத்திற்குரிய Sim Card ஐச் செருகுவதற்கு மகான்கள் அணியமாய் இருக்கும் அற்புதமான பருவம் இது.

வெளியே நிகழ்ந்த வரும் மின் அணுவியல் அதாவது Electronics யுகத்திற்குத் தக்கவாறு நாட்டை முன்னேற்றிக் கொண்டு செல்ல வேண்டிய கடமை நாட்டை ஆளும் அரசியல்வாதிகள், அறிஞர்கள், பொதுத் தொண்டர்கள் மற்றும் செல்வந்தர்கள் கைளில் உள்ளது. அதில் அவர்கள் தவறுவார்கள் எனில் நாடு குட்டிச் சுவராகி விடும்.

கால்திதற்கேற்ப மாறும் வேகத்தில் உலகத்திலேயே முன்னணியில் இருப்பவர்கள் இன்றைய நிலையில் சீனர்களே. நாம் ஏறத்தாழ 115 ஆவது இடத்தில் கிடக்கிறோம்.

எனவே, வெளி உலக விழிப்புணர்வையும் சேர்த்து ஊட்டம் பணியில் கவனகர் முழக்கம், கடுமையான வாசகங்கள் மற்றும் விமர்சனங்களுடன் கூடிய ட்டுரைகளை வெளியிட வேண்டிய சூழ்நிலையில் இருந்தது இன்னும் இருக்கிறது.

அதே வேளையில் உள் உலக விழிப்புணர்வை ஊட்டும் நோக்கத்துடன் வெளி வந்த கட்டுரைத் தொடரே, திருக்குறள் இரகசியங்கள் என்ற தலைப்பில் வெளிவந்த தட்டுரைத் தொடர்.

அந்தத் தொடரின் முத்தாய்ப்பாக வெளியிடப் பெற்ற, நாம்தான் கடவுள் எப்போது?... என்ற தலைப்பையே நூலின் தலைப்பாக வைத்து இந்தக் காலப் பெட்டகத்தை வெளியிட்டுள்ளோம்.

உரன் என்னும் தோட்டியான்
ஓர் ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கோர் வித்து - குறள் 24.

என்று தமிழ்மறை கூறும் இலக்கணத்திற்கு ஒப்ப, இந்த பூமியில் வாழும் ஆன்மாக்களாகிய மக்களில் பிரம்ம வித்துக்களைத் தேர்வு செய்யுயம் வேளை நெருங்கிவிட்டது.

திருமறைகளைப் பயின்று பக்குவமும் தெளிவும் அடைந்து, மகான்களிடம் விசுவாசம் கொண்டு தவசீலர்களாய் மாறுவதற்குரிய தீட்சை பெற்று பிரம்ம வித்துக்களாய் உய்வு பெறுவதற்குரிய காலம் இது.

வேளை வந்துவிட்டதால் வெளியிட்டுள்ளோம். விரும்பி ஏற்றுப் படித்துப் பயிற்சி செய்து பயன் பெறுக.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

அன்பன்
இராம கனகசுப்புரத்தினம்---------------------------------------------------------------------------------------------------------------------------------------சிற்றின்பம் பேரின்பம்


ஏக்கத்தை வெல்லுங்கள் இன்பத்தை அள்ளுங்கள்

காமம் என்பது உயிர்களின் ஓர் அடிப்படைத் தேவை. அடிப்படை உரிமையும் கூட.

இரத்தத்தில் நீரின் அளவு குறைந்தால் தாகம் ஏற்படுகிறது. தண்ணீர் குடிக்கிறோம். உடலில் உள்ள அணுக்களில் உயிர் வெப்பத்தின் அளவு குறைந்தால் பசி எடுக்கிறத. எரிபொருளாக உணவை உண்கிறோம். உணவோ நீரோ கிடைக்காதபோது அந்த ஏக்கமே நோயாகிறது. அதைப் பசிப்பிணி என்கிறோம்.

அதுபோல் ஆன்மாவின் தாகமாகிய அன்பின் குறைவே காமம் ஆகிறது. ஆன்பு கிடைக்காததால்... அன்பை உணராததால்... அனணை அனுபவிக்காததால்... உயிர்களிடம் தோன்றும் ஏக்கமே காமநோயாக மாறுகிறது.

பெற்றோரின் அன்பு என்பது குழந்தைப் பருவத்தில் கிடைக்கும் காலை உணவு. கணவன் அல்லது மனைவியின் அன்பு என்பது இளமைப் பருவத்தில் கிடைக்கும் மதிய விருந்த. இயற்கையின்... ஞானியரின்... இறைவனின் அன்பு என்பது முதுமைப் பருவத்தில் கிடைக்கும் இரவு விருந்த.

பெற்றோரின் அன்பான அரவணைப்பில் வளராதவர்கள் காலை உணவை இழக்கின்றனர். கணவன் அல்லது மனைவியின் அன்பான அரவணைப்புக் கிடைக்காதவர்கள் மதிய விருந்தையும் இழக்கின்றனர்.

இந்த இரண்டையும் இழந்தவர்கள்தான் முதுமைப் பருவத்தில் பசியும் தாகமும் அதிகமாகி வெறி பிடித்தவர்கள் ஆகின்றனர் காம்ம் அவர்களிடம் கொடிய நோயாக வளர்கிறது.

இயற்கையுடன் முரண்பாடுகிறார்கள் மகான்களின் போதனைகளாகிய திருமறைகளுடன் இரண்படுகிறார்கள். இறைவனின் அருளால் காம தேகத்தை ஞான தேகமாக மாற்றும் அரிய வாய்பபையும் இழக்கிறார்கள் காமம் குறித்தும் அதை முறைப்படி அனுபவிக்காததால் வரும் இழப்பு குறித்தும் இவ்வாறு விளக்குகிறார் பகவான் ஓஷோ ரஜ்னீஷ்.

நம் நாட்டைப் பொறுத்தவரை இந்த நோய் பாமரர் முதல் பண்டிதர்வரை எல்லோரிடமும் நீக்கமற நிரம்பி வழிகிறது. இதனால் பாலியல் நோயாகிய எய்ட்ஸ் நோயில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம்.

அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் I.A.S., I.P.S., அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் கோடி கோடியாய்ச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் செல்வந்தர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் முற்றும் துறந்த முனிவர்கள் என்றுகூறிக்கொள்கள், சாமியார்கள், சற்குருமார்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்கள்.

இவற்றிற்கான காரணம்தான் என்ன?...

இறைவன் வகுத்துத் தந்துள்ள புனிதமான ஓர் ஏற்பாட்டை குற்ற உணர்வுடன் செய்யும் கொடூரமான செயலாக ஏன் மாற்ற வேண்டும்?...

இத்தகைய சிந்தனையின் விளைவாகப் பிறந்ததுதான் சிற்றின்பம் பேரரின்பம் என்னும் இந்தச் சிறிய நூல்.

தமிழ் மறையாகிய திருக்குறளும் பிற திருமறைகளும் காமம் பற்றிக் கூறும் கருத்துக்களை அடிப்படையாய் வைத்து இந்த நூலை வடிவமைத்துள்ளோம்.

பாலியல் உண்மை குறித்து எழுதுபவர்களை அருவருப்பாகவும் பார்க்கும் இன்றைய சமுதாயச் சூழலைக் கருத்தில் கொண்டு அந்த உளவில் கடைப்பிடிக்க வேண்டிய சில நுட்பமான செய்திகளை வெளிப்படையாய்க் கூறாமல் தவிர்த்துள்ளோம். சில செய்திகளை மேலோட்டமாக விளக்கியுள்ளோம். பொறுமையாய்ப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.

மேலம் விளக்கம் தேவைப்பட்டால் எமது பயிற்சி வருப்புகளில் கலந்து கொள்ளும்போது வெளிப்படையாய்க் கேட்டுத் தெளிவு பெறுங்கள். தேவையின்றிக் கூச்சப்படாதீர்கள். மூடி வைக்கப்பட்ட எந்த உணர்வும் நோயாக மாறிவிடும். வெளிப்படையாய் இருந்தால் எல்லா உடல் நோயும் மறையும். எல்லா மனநோயும் மறையும்.

குழந்தைப் பருவம் என்பது சம்பாதிக்காத பருவம். இறைவன் கொடுத்தனுப்பிய இருப்பைப் பயன்படுத்தி வளரும் பருவம். இளமைப் பருவம். ஐம்பது வயதுக்கு மேல் வரும் முதுமைப் பருவம் என்பது செலவைக் குறைத்துக் கொண்டு சேமிக்கும் பருவம்.

இறைவன் கொடுத்தனுப்பிய இருப்பை மீண்டும் சேமித்து விட்டால் குழந்தையைப் போன்ற கள்ளமற்ற முகத்துடன் பார்ப்பவர்கள் அனைவரும் விரும்பிக் கொஞ்ச நினைக்கும் தெய்வீகக் கவர்ச்சியுடன் மீண்டும் இறைநிலையை அடையலாம்.

மீதியுள்ள விந்தாற்றல் மரணத்தின்போது வெளியே கொட்டிவிட்டால் சாவு. உள்ளேயே கட்டிக் கொண்டால் சமாதி. அதுதான் போகாப்புனல்.

போகாப் புனலை அடைந்தவர்கள்தான் சாகாத்தலையையும் வேகாக்காலையும் அடைகிறார்கள்.

இதுதான் சிற்றின்பம் பேரின்பமாய் மாறும் நுட்பம்.

புரிந்து பின்பற்றி ஏக்கத்தை வெல்லுங்கள். இன்பத்தை அள்ளுங்கள். வாழ்க வளமுடன்.

அன்பன்.
இரா. கனகசுப்புரத்தினம்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------


விநோதமான வினாக்கள் கவனகரின் விடிவுதரும்

சந்தேக இருள் அகலட்டும்
சந்தோஷ ஒளி பரவட்டும்

வாழ்க்கை என்பதே வினாக்களுடன் தொடங்கி விடைகளில் முடிவது, சந்தேகங்களுடன் தொடங்கி தெளிவில் முடிவது, அஞ்ஞானத்தில் தொடங்கி ஞானத்தில் முடிவது.

வினாக்களுடனும் சந்தேகங்களுடனும் அஞ்ஞானத்துடனும் தொடங்கிய வாழ்க்கை, விடைகளுடனும் தெளிவுடனும் ஞானத்துடனும் முடியாத பட்சத்தில் வாய்ப்பதே மறுபிறவி என்னும் Reattempt . சந்தேகம் என்னும் முக்திப்பரிசைப் பெறும்வரை இறைவன் நம்மைப் பொராட்டக் களத்திலிருந்து மீட்பதில்லை.

பொதுவாய்த் த்துவ நூல்கள் அனைத்துமே சந்தேகம் தெளிவித்தல் என்ற பகுதியைக் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக கைவல்ய நவநீதம் என்ற வேதாந்த நூல் 1. த்துவ விளக்கப்படலம் 2. சந்தேகம் தெளிதல் படலம் என்னும் இரண்டு பகுதிகளைக் கொண்டிருப்பதைக் காணலாம்.

வாழ்க்கைத் தத்துவத்தில் ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவிக்க வேண்டியது வாழ்ந்து முடித்தொரின் தலையாய கடமையாகும்.

அந்த வகையில் கவனகர் முழக்க மாத இதழின் வாயிலாக மக்கள் விடுத்த வினாக்களுக்கு நாம் வழங்கிய கவனகர் பதில்கள் என்ற விடைகளின் தொகுப்பே இந்தச் சிறிய நூல்.

உடல்நலம் மனவளம் சமுதாய மேன்மை, பொருளாதார விடுதலை ஆன்மீக வெற்றி என்னும் ஐந்து அடிப்படை இலட்சியங்களை மக்கள் எளிதாக அடைவதற்கு உதவுவதே, கவனகர் முழக்கம் மாத இதழின் நோக்கம்.

சொர்க்கம் நரகம் என்று தனியாக வேறெங்கும் இல்லை அப்படி இருக்குமானால் வினைகளுக்குரிய வெகுமதியையும் தண்டனையையும் பூமியில் ஏன் இன்ப துன்பங்களாய் அனுபவிக்க வேண்டும்?... அதைச் சொர்க்கம் அல்லது நரகத்திலேயே அனுபவித்து முடிக்குமாறு இறைவன் செய்திருக்கலாமே?...

எனவே இந்த பூமியின் வரவு - செலவுக் கணக்கை இந்த பூமியிலேயேதான் பைசல் செய்யவேண்டும். இது போல் எந்த பூமியில் நாம் பிறந்தாலும் அந்தந்த பூமியின் கணக்கை அந்தந்த பூமியில்தான் நேர்செய்ய வேண்டும்.

அவ்வாறு நேர்செய்து சுத்த வெளியாக ஆனந்தத்தை மட்டுமே சுமந்து செல்லும் ஆன்மாதான் அஞ்ஞான இருளைக் கிழித்துக்கொண்டு ஞான ஒளியில் கலக்கும்.

சிக்கல்களை எளிமையாக எடுத்துக்கொண்டு எப்போதும் சிரித்த முகத்துடன் வாழ்வோர் தனக்குள்ளும் சொர்க்கத்தை உருவாக்குகின்றனர். தன்னைச் சுற்றியும் சொர்க்கத்தை உருவாக்குகின்றனர்.

சிரிப்பைக்கூடக் கடுமையாக எடுத்துக்கொண்டு எப்போதும் சிடுசிடுத்த முகத்துடன் வாழ்வோர் தனக்குள்ளும் நரகத்தை உருவாக்குகின்றனர். தன்னைச் சுற்றியும் நரகத்தை உருவாக்குகின்றனர்.

சொர்க்கத்தை உருவாக்குவோரின் உள்ளம் தெய்வங்கள் மற்றும் மகான்களின் சங்கமத் துறையாகத் திகழ்கிறது. நரகத்தை உருவாக்குவோரின் உள்ளம் துர்தேவதைகள் மற்றும் அஞ்ஞானிகளின் சங்கமத் துறையாக மாறுகிறது.

எம் மக்கள் அனைவரும் தம்மைச் சுற்றி சொர்க்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவர்களின் உள்ளம். செய்வங்கள் மற்றும் மகான்களின் சங்கமத் துறையாகத் திகழ வேண்டும். என்பதே எம் ஆசை. அதை நோக்கிய பயணமே எம் வாழ்க்கை

சந்தேகமே இருள், சந்தோஷமே ஒளி. சந்தேக இருள் அகலட்டும். சந்தோஷ ஒளி பரவட்டும். வாழ்க வளமுடன்.

அன்பன்
இராம. சனகசுப்புரத்தினம்.----------------------------------------------------------------------------------

ஆசான் அருளிய அற்புத நெறிகள்

ஆசானை வணங்குவோம்
அன்னதானம் செய்வோம்
ஆன்ம விடுதலை அடைவோம்.

திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் ஓங்காரக் குடில் மகான்களின் சங்கமத் துறையாகத் திகழும் திருத்தலம். ஆசான் அரங்கராச தேசிக சுவாமிகள் அகத்திய மாமுனிவரின் அவதாரமாய்த் திகழும் அற்புத ஞானி.

நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான ஏழை மக்களின் பசிப்பிணியை ஆற்றி வரும் சத்திய தருமச் சாலையே ஆசான் அவர்களின் குடில். பண்பட்ட மகான்களின் உபதேசங்களைப் பாமர மக்களுக்கு அருளமுதாக ஊட்டிப் பணன்மிக்க மக்களாக அவர்களை மாற்றும் ஆன்மீக வேள்வியே ஆசான் செய்துவரும் வேள்வி.

தமிழ்த் திருமறைகளின் மகிமையையும் தமிழ் மண்ணில் அவதரித்த ஞானிகளின் பெருமையையும் உலகம் முழுவதும் இணர்ததி வரும் ஒப்பற்ற பணியைச் செய்து வரும் ஓர் உயிர்ப்புள்ள ஆலயமே ஓங்காரக் குடில்.

மகான்களின் பெயர்களை எப்படி மரியாதையுடன் உச்சரிக்க வேண்டும் என்ற ஆன்மீக பால பாடத்தை ஓங்காரக் குடிலில்தான் நாம் கற்றுக் கொண்டோம் நம்பிக்கையுடன் செய்யும் நாம ஜெபத்தின் மூலம் மகத்தான பயன்களைப் பெறலாம் என்ற எளிய ஆன்மீக மார்க்கத்தையும் ஓங்காரக் குடிலில்தான் உணர்ந்து கொண்டோம்.

மலரவிருக்கும் ஞானச் சித்தர் காலத்திற்குக் கட்டியம் கூறும் வகையில் மணிமணியாக ஆசான் அருளிய உபதேசங்களைக் கவனகர் முழக்கத்தில் வெளியிட்டு வந்தோம். அந்த அரிய மணிவாசங்களின் தொகுப்பே இந்த அற்புத நூல்.

உடல்நலம் மனவளம் தன்னம்பிக்கை, ஆன்மீகம், திருமறைத் தத்துவங்கள் என எந்தத் துறையைத் தொட்டாலும். ஆசான் அவர்களின் கருத்து, ஆழமும் அர்த்தமும் உள்ளதாகத் திகழ்வதை நாம் உணர்ந்துள்ளோம் இந்த நூலின் வழி நீங்களும் உணர முடியும்.

எதிரில் விளையாடுபவன் எதிரியல்ல. பின் ஏன் வருகிறது ஆத்திரம்?... என்று ஆசான் கேட்கும் கேள்வியில் எதிரிகள் மீது உள்ள வெறுப்புணர்ச்சியும் வேற்றுமை உணர்ச்சியும் காணாமல் போகின்றன.

இறைக் களஞ்சியத்தில் விதை நெல் ஆவதா? கஞ்சிப் பானைக்குள் வெந்து மாள்வதா? என்று கேட்கும் கேள்வியில் ஜென்மத்தைக் கடைத்தேற்றும் அவசியமும் அவசரமும் நமக்கு உணர்த்தப் பெறுகிறது.

அன்னதானம் மட்டுமல்ல, குடிநீர் வசதியற்ற பகுதிகட்குக் கடிநீர்தானம் இலவசக் கண் மருத்துவம் வழியற்ற மக்களுக்கு வாஞ்சையுடன் செய்து வைக்கும் இலவசத் திருமணங்கள் என ஆசான் அவர்களின் அரிய பணிகள் பல பரிமாணங்களில் நிகழ்கிறது.

ஆசான் அருளிய அற்புத நெறிகள் என்னும் இந்த அற்புதத் நூலைப் படித்தால் மடடும் போதாது. அந்த நெறிகளைப் பின்பற்றி வெற்றிபெற முயல வேண்டும்.

ஒருமுறையாவது ஓங்காரக்குடில் வளாகத்திற்குச் சென்று ஆசான் அரங்கராச தேதிக சுவாமிகளின் அரிய ஞான தீட்சையைப் பெறுதல் வேண்டும்.

ஆசானை வணங்குவோம்
அன்னதானம் செய்வோம்
ஆன்ம விடுதலை அடைவோம்.

அன்பன்
இராம. சனகசுப்புரத்தினம்
பதினாறு கவனகர் ஆசிரியர் கவனகர் முழக்கம்.---------------------------------------------------------------------நினைவாற்றல் வளர

வணங்கி வரவேற்கிறேன்

எங்கள் கிராமத்தில் ஒருநாள் இரவு... கூலி வேலை செய்த அலுப்பில் கையை மடக்கி வைத்து, தெருத்திண்ணையில் படுத்து நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தேன்.

நடுநிசியில் என் தாத்தா என்னைத் தட்டி எழுப்பினார். அதுவும் நீண்ட நேரம் போராடி என்னை விழிக்க வைத்தார்.

எழுந்து உட்கார்ந்ததும் கண்ணைக் கசக்கியபடி, என்ன தாத்தா? என்று கேட்டேன்.

தலையணை இல்லாமல் உறங்கிக் கொண்டு இருக்கிறாயே, இந்தா, இதை வைத்துப் படு என்று கூறி, ஒரு தலையணையைக் கையில் திணித்துவிட்டுப் புறப்பட்டார். தலையணை கிடைத்தது. ஆனால், தூக்கம் போய்விட்டது.

எனக்குத் தலையணை முக்கியமா, தூக்கம் முக்கியமா என்பது கூடத் தெரியாமல் இப்படி எழுப்பிவிட்டாரே... என்று புலம்பியபடி. தலையணையை மடியில் கிடத்தி விடிய விடியத் தாலாட்டிக் கொண்டிருந்தேன்.

என் தாத்தா ராசிதான் அப்படி என்று நினைத்தேன். பிற்பாலததில் உதவி செய்வதாய் நினைத்து, குறிக்கோளுடன் நான் செய்த சில செயல்களும் இப்படித் தலையணையைக் கொடுத்து, தூக்கத்தைக் கெடுக்கும் சீர்திருத்தம் போலவே ஆகிவிட்டது.

எனவே வாழ்க்கையில் குறிக்கோள் என்று எதையும் வைத்துக் கொள்ளாமல் இயல்பாய் இருக்கத் தொடங்கினேன். ஆனால், விரும்பினால் எந்த நல்ல குறிக்கொளும் என்னைக் கருவியாய்ப் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் தயார் நிலையில் இருந்தேன். தொட்டதெல்லாம் வெற்றியாகத் தொடங்கியது.

பிறக்கும்போது நாம் வெறும் குழந்தைகள்தாம். வணிகராகவோ, அரசு ஊழியராகவோ, பொதுநலத் தொண்டராகவோ, கவிஞராகவோ, கலைஞராகவோ, எழுத்தாளராகவோ பிறப்பதில்லை

முன்னாலிருந்து ஏதோ ஒரு கவர்ச்சி நம்மை ஈர்ப்பதால் அல்லது பின்னாலிருந்து ஏதோ ஒரு தேவை ந்மைத் தள்ளுவதால் நகரத் தொடங்குகிறோம், செயல்படுகிறோம்.

அதன் விளைவாய் மேலே குறிப்பிட்டதைப் போன்ற ஏதேனும் ஒரு வடிவத்தை எடுக்கிறோம் அல்லது மாறி, மாறிப் பல வடிவங்களை எடுக்கிறோம் அந்த வகையில் குறிக்‍கோளற்ற நான் பல வடிவங்கள் எடுத்தேன்.

வறுமை, என்னை தினக்கூலியாக்கிகறது படிப்பு ஆசிரியனாக்கியது பொருளாசை, வணிகனாக்கியது. பொறுப்பை உணர்த்திய இலக்கியவீதி பதின்கவனகராக்கியது முகுதக் குடும்பத்தைச் சேர்ந்த மலர் மல்லிகை எழுத்தாளன் ஆக்கியிருக்கிறது.

மனம் ப்ற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் எனக்குத் தெரிந்ததை விளக்கி இருக்கிறேன்.

மனம், மழு உரிமையுடன் உலவும் இயல்பு உடையது. அதனால்ன், மனத்தைப் பெற்றிருக்கும் மனிதனும் சர்வ சுதந்தரமாய் இந்தப் புவியில் உலவும் ஆற்றலைப் பெற்றுள்ளான்.

ஆடு மாடுகளுக்கு, இலைகளைக் கடிக்கும் அளவுக்கு உரிமை உண்டு. மரத்திற்கோ, புதிய இலகளை உற்பத்தி செய்து தன்னைக் காப்பாற்றிறக் கொள்ளும் ஆற்றல் உண்டு.

யானைக்குக் கிளைகளை முறிக்கும் அளவுக்கு உரிமை உண்டு. மரத்திற்கோ புதிய கிளைகளை விட்டு, தன்னைக் காப்பாற்றிறக் கொள்ளும் ஆற்றல் உண்ட.

மரத்தை வேருடன் சாய்க்கும் உரிமையை மனிதன் மட்டுமே எடுத்துக் கொண்டான். அதைக் தடுத்து, த்ன்மைக் காப்பாற்றிறக் கொள்ளும் ஆற்றலோ... பாவம், மரத்திற்ககு இல்லாமல் போய்விட்டது.

இரத்தை வேருடன் சாய்க்கும் உரிமையை எடுத்துக் கொணட மனிதன், வேருக்கு நீர் விட்டு அதை வளர்க்கும் கடமையையும் எப்போது உணர்ந்து கொள்கிறானோ -- அப்போது மனமலர்ச்சி (Mental maturity) நிலையை அடைகிறான். அத்தகைய மலர்ச்சிக்கு வழி காட்டுவதே, இந்நூல் பிறந்ததன் நோக்கம்.

அடுகிற மாட்டை ஆடிக் கறக்கணும்
பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்கணும்

வாய்க்குஇதம் கேட்ட மாட்டைப்
போக்கில் விட்டுத்தான் திருப்பணும்...

என்றெல்லாம் நாட்டு வழக்கில் செல்வதுண்டு.

நம் மனம் எந் மாதிரி மாடு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு, அதன் போக்கில் சிறிது நேரம் விட்டும், நம் விருப்பத்திற்குச் சிறிது நேரம் இணங்கவைத்தும் மாறி மாறி இயக்க வேண்டும்.

ஆனால் விழிப்புணர்வு (Consciousness) என்னும் கடிவாளத்தை மட்டும் விட்டுவிடக் கூடாது.

நாளடைவில், தானே நம் மனம் கட்டுப்பட்டுவிடும். தேசிங்குராஜன் குதிரை மாதிரி நமக்கு உழைக்கும்.

எளிதில் அடங்குகின்ற மனத்தைவிட அடங்காத மனத்திற்கு ஆற்றல் அதிகம். அடங்குகின்ற மனம், கழுதையைப் போல் ‍பொதி சுமக்க உதவும். அடங்காத மனம் அடங்கிவிட்டாலோ, குதிரையைப் போல் கம்பீரமாய்ச் சவாரி செய்ய உதவும். அடங்காத மனத்தை அடக்கியவர்கள் மட்டுமே சமூகம் வியக்கும் வித்தைகளைக் காட்ட முடியும்.

அடங்காத மனம் பணிந்து விட்டால், ஜீ பூம்பா... பூதம் போல் கேட்டதையெல்லாம் கொண்டு வந்துவிடும்.

வாழ்வைக் கேட்டால் வாழவைக் கொண்டு வரும் காவைக் கேட்டால் சாவைக் கொண்டு வரும். எனவே, எச்சரிக்கையாய்க்கேட்க வேண்டும்.

நம் வாழ்க்கை இரண்டு நிலைகளை உடையது. ஒன்று மாறாததத்துவ நிலை Constant Truths. இரண்டு மாறுகின்ற ‍பொருள் நிலை Varying Matters.

இனிப்பு என்ற சுவை, மாறாத தத்துவம் அதை உணாத்தும் சர்க்கரை மாறுகின்ற பொருள்.

விதை மாறாத தத்துவம். மரம் நொடி தோறும் மாறுகின்ற பொருள்.

I = PNR/100 என்ற தனிவட்டிச் சூத்திரம் மாறாதது. அதைப் பயன்படுத்திப் போடும் கணக்குகள் மாறிக்கொண்டே இருப்பவை.

ஆனால், தத்துவமின்றிப் பொருள் இல்லை பொருளின்றித் தத்துவமில்லை. அச்சாணி தாங்காமல் சக்கரம் சுழல்வதில்லை
சக்கரம் இல்லாத அச்சாணியால் பயனில்லை.

அதேபோல், மனம் பற்றிய சில அடிப்படைத் தத்துவங்கள் மாறாதவை. அதேவேளையில், ஒவ்வொருவரின் தனிப்பட்ட மனமோ, ‍நொடிதோறும் வித்தியாசமான கோணங்களில் மாறிக் கொண்டே இருப்பது.

ஒருவர் மனத்திற்கு ஒத்துப்போகும் பயிற்சிகள், இன்னொருவர் மனத்திற்கு ஒத்துப்போகும் என்பதற்கு உறுதி ஏதுமில்லை.

எனவே, இந்நூலில் மனத்தின் மாறாத தத்துவங்களைப் பற்றி மட்டுமே விளக்கியுள்ளேன். படிப்பவர்கள் அவரவர் மனத்தின் பக்குவத்திற்கேற்றவாறு அந்த உண்மைகளை நடைமுறைப்படுத்தி வெற்றி பெறலாம்.

அதாவது இனிப்பைப் பற்றியும் அதைத் தயார் செய்யுயம் முறை பற்றியும் விளக்கிவிட்டேன். நீங்கள், உங்கள் பக்குவம் போல்லட்டோ, ஜாங்கிரியோ செய்து கொள்ளுங்கள்.

இயற்கையின் அற்புதங்களில் முதன்மையானது. அதன் விருப்பு பெறுப்பற்ற நடுநிலைப் பண்பு Law of Grace.

கரும்பு நல்லவன் தின்றாலும் இனிக்கும் கெட்டவன் தின்றாலும் இனிக்கும் மலர் எல்லாருக்கும் வேறுபாடின்றி மணக்கும். தீண்டும் அனைவர்க்கும் தென்றல் இன்பம் பரும். தீ, யாராயிருந்தாலும் சுடும்.

அதுபோல் பயிற்சி யார் செய்தாலும் ஆற்றல் வரும், இயற்கையிடம் தன்னை யார் அர்ப்பணித்தாலும் வெற்றி வரும்.

முயலுங்கள் அர்ப்பணியுங்கள் வெற்றி பெறுங்கள்

வணக்கமுடன் அன்பன்
இரா. கனகசுப்புரத்தினம்.

----------------------------------------------------------------------


கடவுளைக் கண்டோம்
காட்டவும் வல்லோம்.

வரவேற்போம்
வணங்குவோம்
வழிபடுவோம்

புண்ணிய பூமியாகிய இந்தத் தமிழ் மண்ணில் பல மகான்கள் அவதரித்துள்ளனர். அவர்களுள் கடவுளைக் கண்டதாகப் பிரகடனம் செ்ய்தோர் வெகுசிலரே.

மெய்யே உன் பொன்னடிகள்
கண்டு இன்று வீடுற்றேன்...

என்று திருவாசகத்தில் பிரகடனம் செய்தார் மணிவாசகப் பெருமான்.

இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே

என்று தேவாரத்தில் பறைசாற்றினார் மகான் திருநாவுக்கரசர்.

அணிந்து நின்றேன் உடல் ஆதிப்பிரானை
தணிந்து நின்றேன் சிவன் தன்மை கண்டேனே

என்று திருமந்திரத்தின் வழி உருகினார் திருமூலதேவர்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு

என்று திருவள்ளுவப் பெருந்தகையும் கிவதரிசனத்திற்குரிய இலக்கணம் கூறினார்.

பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன்
மன்றாடும் அய்யரைக் கண்டேனடி

என்று திருவருட்பாவில் வள்ளல் பெருமான் இறைவனைக் கண்ட இன்பத்தைப் பாடினார்.

கண்டேன்... கண்டேன்... கண்ணுக்கினியன் கண்டேன் என்பதுபோல் இறைதரிசனத்தைக் கண்ட இந்த ஞானிகள் யாருமே தற்போது நம்முன்னே உருவமாய் இல்லை. அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து அந்த அனுபவத்தைக் கேட்டு மகிழும் பெரும்பேறும் நமக்குக் கிட்டவில்லை.

அந்தக் குறையை நிவர்த்தி செய்வதுபோல் சிவதரிசனம் கண்ட தவயோகியாக நம் முன் காட்சியளிக்கும் ஒரே மகான்தான் தவத்திரு ஞானதேவபாரதி சுவாமி அவர்கள். ஏக இறைவனாகிய என் அப்பன் ஆதிசிவனுடன் சுவாமிகள் நிகழ்த்திய அமுத இரையாடல் ஆன்மீகத்தின் ஆழத்திற்கே நம்மைக் கொண்டு செல்பவை.

யாம்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற அறை கூவலுடன் சுவாமிகள் அந்த அற்புதத்தேனை இந்த நூலின் வழியே நமக்கு வார்த்து வழங்கியுள்ளார்கள். அதுவும் சாதாரணமாய் அல்ல. உயிரைப் பணயம் வைத்துத் தன் அனபவத்தைத் தற்சோதனை செய்து பார்த்துத் தெளிந்த பின்பே வழங்கியுள்ளார்.

ஆன்மீக உலகில் போலிகளை அடையாளம் காட்டி விரட்டும் நூலாகவும் உண்மையைத் தயக்கமோ, கலக்கமோ இன்றித் தைரியத்துடன் உணர்த்தும் நூலாகவும் திகழும் ஒர் ஆன்மீகப் புரட்சிநூல் என்றே இந்த நூலைக் கருதுகிறோம்.

உண்மைக்கு உயிர் கொடுப்போம் என்ற கொளகை முழக்கத்துடன் வெளிவரும் மாத இதழாகிய கவனகர் முழக்கம் என்ற நம் மாத இதழில் சுவாமி அவர்கள் வடித்த ஆன்மீகக் கட்டுரைகளுடன் இந்த அரிய நூல் தொடங்குகிறது.

ஆதி சிவத்துடன் நிகழ்ந்த ஒர் அற்புத உரையாடல் என்ற முத்தாய்ப்பான முடிவுடன் நூல் நிறைவு பெறுகிறது. இவற்றுக்கிடையே உடல்... உயிர்... மனம்... ஆன்மா குறித்த தத்துவங்களைத் தெள்ளத் தெளிவாக சுவாமிகள் விளக்கி அருளியுள்ளார்.

குறிப்பாக, மனோலயம், மன ஒருமைப்பாடு, மன அமைதி மனநிறைவு என்பனபோன்ற அம்சங்கள் குறித்து நாம் நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம். ஆனால் மனோ நாசம் என்னும் மாபெரும் அம்சம் குறித்துத் தெளிவற்ற நிலையில் இருந்தோம்.

மனம் இறக்கும் வித்தை, மனம் கடக்கும் வித்தை என்னும் மனோ நாச வித்தை குறித்துச் சுவாமி அவர்களின் ஈடு இணையற்ற கருத்துகள் பொட் டில் அறைவதுபோல் பளிச் சென உள்ளன.

மரணமிலாப் பெருவாழ்வு என்னும் மகத்தான வெற்றியை அடைவதற்கு இந்த மனோநாச வித்தைதான் உதவு என்பதால் இதை மனித குலத்திற்கு வழங்கப்பெற்ற புதையலாக உணர்கிறோம். இந்த மனோநாச வித்தையைச் சரியாகப் புரிந்து கொளளாத காரணத்தால்தான் பல ஞானிகள் உயர் ஞானத்தை அடைந்தும் மக்கள் கூட்டம் பணம், புகழ் என்னும் மாயைகளில் சிக்கிச் சமாதி என்ற உயர்நிறைவை அடையாமல் மரணம் என்னும் தோல்வியையே அடைந்தனர் என்பதைச் சுவாமிகள் வெட்ட வெளிச்சமாக. விளக்கி அடுத்த தலைமுறையை எச்சரிக்கிறார்.

இறைதரிசனம் என்ற எல்லையை அடையாத காரணத்தினால் பல ஞானிகள் கடவுள் பற்றிய கருத்தைக் கூறும்போது மட்டும் கண்டபடி குழப்புவார்கள்.

அது ஒர் ஆற்றல். அதை உணரத்தான் முடியும் பார்க்க முடியாது என்று கூறியோர் பலர். அது ஒருவகை ஜோதி தரிசனம் என்பதுடன் நிறுத்திக் கொண்டோர் பலர்.

பேருயிரும் பேருணர்வும் பிரபஞ்ச மனமும் கொண்ட பரம்பொருள் அது. அதைப் பார்க்கலாம். அதனுடன் பேசலாம். அதை நாம் உடம்பினுள் இருக்கும் ஆன்மாவுக்குள் உணரலாம் என்னும் பேருண்மையை இந்த உலகுக்கு உணர்த்தியுள்ள முதல் நூல் இதுவே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பதினேழு வயதில் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும்போது பள்ளியை ஆய்வுசெய்ய வந்த முதன்மைக் கல்வி அதிகாரி நீ எதிர்காலத்தில் என்ன ஆகப்போகிறாய் என்று கேட்டவுடன் நான் சாமியார் ஆகப் போகிறேன் என்று வெளியே வேடிக்கையாகவும் மனதிற்குள் வினயமாகவும் பதில் கூறியதிலிருந்து சுவாமிகளின் ஆன்மிகப் பயணம் தொடங்குகிறது.

ஊனினை உருக்கிஉள்ளொளி பெருக்கி.. என்ற மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தை அப்படியே ஏற்றுத் தன் கையில் மிகப்பெரிய கற்பூரக் கட்டியைக் கொளுத்தி ஊனினை உருக்கிப் பார்த்தது...

பழனி... வடலூர்... பொதிகை மலை... கொல்லிமலை... சதுரகிரி மலை... இமயமலை... காசி என இந்தியா முழுவதும் நடந்து இறைவனைத் தேடியது...

கதவைப் பூட்டிக்கொண்டு மாதக்கணக்கில் பட்டினி கிடந்து தவம் செய்தது...

ஒரேயொரு இளநீரை அருந்திவிட்டு 21 மணிநேரம் அசையாத தவம் மேற்கொண்டது...

ஈன்ற தந்தை மரணமடைந்த செய்தி கேட்டும் ஈமக்கடன் செய்யச் செல்லாது, ஈசன்தான் என் ஒரே தந்தை. அவன் ஜனனமும் மரணமும் அற்றவன். எனவே யாருடைய இழப்பும் என்னைப் பொறுத்தவரை இழுப்பல்ல என்று கூறியவண்ணம் பற்றற்று இருந்தது...

இப்படிப் பல்வேறு பரிமாணங்களில் பல்வேறு படிநிலைகளில் அவரது ஆன்மீகப்பயணம் தொடர்கிறது.

ஏறத்தாழு 44 ஆவது வயதில் 23/2/2007 வெள்ளிக்கிழமை இரவு சப்தமி திதி, கார்த்திகை நட்சத்திரத்தில் ஏக இறைவனாகிய ஆதிசிவத்தைத் தன் ஆன்மாவிற்குள் தரிசனமாகக் கண்டதுடன் பயணம் நிறைவை நெருங்குகிறது.

வந்த இறைவன் மரணமிலாப் பெருவாழ்வைத் தந்தானா? என்பதை உறதி செய்து கெள்ளும் வகையில் 25/2/2007 ஞாயிறு நள்ளிரவு ஆசிரமத்தின் 30 அடி உயர கோபுரத்திலிருந்து தலைகீழாய்க் குதித்து எந்தச் சேதமும் இல்லாமல் மீண்டதிலிருந்து சுவாமிகளின் பயணம் நிறைவை எட்டுகிறது.

இத்துடன் தனக்காக வாழவேண்டிய தேவை சுவாமிகளுக்கு நிறைவுபெற்று விட்டது. இனிமேல் கடைத்தேறத் காத்திருக்கும் ஆன்மாக்களாகிய நமக்காக மட்டுமே அவர் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

சிவதரிசனத்திற்காகச் சுவாமி செய்த தியாகங்களைக் காணும் போது,

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன் மாது சொன்ன
சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லேன் தொண்டுசெய்து
நாள் ஆறில் கண்எடுத்து அப்பவல்லேன் அல்லேன் இனிநான் ஆளாவ தெப்படியோ திருக்காளத்தி அப்பனுக்கே

என்ற பட்டினத்தடிகளின் கதறல்தான் காதில் ரீங்காரமாய்க் கேட்கிறது.

கலியுகத்திற்குரிய இந்த தவீன உரைநடைத் திருமறையைப் பாராட்டுவதற்கோ, ஆராய்ச்சி செய்வதற்கோ விமரிசனம் செய்வதற்கோ நமக்குத் தகுதி இல்லை

எனவே, வரவேற்போம்... வணங்குவோம்... வழிபடுவோம்....


-----------------------------------------------------------------------------
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி எப்படி?

எது குறித்தும் எஞ்சாதீர்கள்
எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு

ஆறிவுக்குள் உணர்ச்சியும் உணர்ச்சிக்குள் அறிவுமாகப் பின்னப்பெற்றுள்ள ஓர் அழகான பின்னல் ஆடையே நம் வாழ்க்கை

அறிவு நம் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுக்கிறது. உணர்ச்சி, அந்த இலக்கணத்தின் வழியே பொங்கும் இலக்கியமாகச் சுழன்று வெளிப்படுகிறது.

அறிவு நம் வாழ்க்கை என்னும் சக்கரமாகச் சுழன்று நம் இன்ப துன்பப் பயணத்தை நடத்தித்தருகிறது.

இந்த வாழ்க்கைப் பயணத்தில் எங்காவது தடை நேர்கிறது என்றார்... அந்தத் தடைக்கு அறிவு உணர்ச்சி என்னும் இந்த இரண்டு அம்சங்களில் ஏதோ ஒன்றில் தொழில் நுட்பச் சிக்கல் Technical Fault ஏற்பட்டுள்ளது என்பதே பொருள்

எந்த மாற்றத்திற்கும் தயார் என்ற ஊக்கத்துடன் மனத்தை வெட்டவெளியாகத் திறந்து வைத்திருப்போர்க்கு எந்த வெற்றியும் இந்த உலகில் எளிதாக வாய்க்கும்.

நான் எந்த விதத்திலும் மாறமாட்டேன். மற்றவர்கள்தாம் எனக்காக மாற வேண்டும் என்று அடம் பிடிப்போர்க்குத்தான் எல்லாமே கிக்கலாகத்தென்படும்.

மாறமாட்டேன் என்று அடம் பிடிக்கும் அந்தப் பிடிவாத மனத்திற்குப் பெயர்தான் விதி... வினைப்பயன்... துரதிர்ஷ்டிம் என்பன போன்ற பல பெயர்கள் வைத்துள்ளோம்.

சமையலில் உப்பு சற்று அதிகமாகத் தெரிந்தால் தண்ணீரைச் சேர்த்துச் சரி செய்யலாம். தண்ணீர் அதிகமாகிச் சப் பென்று இருந்தால் சிறிது உப்புச் சேர்த்துச் சரிசெய்யலாம்.

அதுபோல் உணர்ச்சிசார்ந்த சிக்கல்களுக்குச் சிறிது அறிவைக் கலந்தால் சரியாகிவிடும். அறிவு சார்ந்த சிக்கல்களுக்குச் சிறிது உணர்ச்சியைக் கலந்தால் சரியாகிவிடும்.

எல்லாமே தொழில் நுட்க் கோளாறு Techinical Fault தான்.

எனவே, எதற்கும் அஞ்சாதீர்கள் எல்லாவற்றுக்கும் தீர்வு உண்ட. இதைத் தெளிவுபடுத்துவதே எங்கும் வெற்றி எதிலும் வெற்றி எப்படி... என்ற இந்த நூலின் நோக்கம்.

படியுங்கள் பின்பற்ற முயலுங்கள் பயன் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்.

அன்பன்
இராம. கனகசுப்புரத்தினம்


-------------------------------------------------------------------------------------


முன்னேற விரும்புவோர்க்கு

நாட்டை அறிவாளிகள் ஆட்சி செய்ய வேண்டும்.

இது கனடா நாட்டில் தங்கியிருந்த போது எழுதிய நூல்.

தூய பொதுத் தொண்டரும், மொழி - இன உணர்வாளரும், வாழ்வில் மறக்கவியலாத நண்பரும், மாந்த நேய உணர்வாளருமாகிய திரு. எஸ் இராசரத்னம் அவர்களது விருப்பப்படி எழுதப் பெற்ற நூல்.

வறுமையில் செம்மை என்ற இலக்கணத்திற்கு ஓர் இலக்கியமாய்த் திகழ்பவர் அன்னாரது துணைவியார் அருமைச் சகோதரி திருமதி. பவாணி இராசரத்னம் அவர்கள்.

இவர்களது அன்பான விருந்தோம்பலில் நானும் என் துணைவியாரும் மகிழ்ந்திருந்தபோது ஓர் நல்ல ஆட்சியாளன் எப்படி இருக்கவேண்டும். நாட்டை முன்னேற்ற விரும்புவோர் எத்தகைய பண்புகள் பெற்றிருக்க வேண்டும் என்பன போன்ற கருத்துக்களைத் திருக்குறள் - பொருட்பாலில் வள்ளுவப் பெருந்தகை வழியில் விளக்கி ஒரு நூல் எழுதித்தாருங்கள். எங்கள் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கிறோம் என்ற ஐயா இராசரத்னம் தெரிவித்தார்.

உடன் பொருட்பாலில் ஓர் அதிகாரத்திற்கு ஒரு குறளாகத் தோவு செய்து அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த நூலை அணியம் செய்தேன்.

தற்போது தமிழகத்திலும் அரசியல் உலகம் அறிவுப்பூர்வமாக இல்லை போதுமான முன்னேற்றத்தை நாடு பெறவும் இல்லை

சட்டமன்ற உறுப்பினர்கள் என்போர் மக்களின் பிரதிநிதிகள் என்பதில் ஐயமில்லை. ஆனால் மக்களில் பெரும்பாலோர் மடையர்களாக இருந்தால் மக்களின் பிரதிநிதிகள் மடையர்களின் பிரதிநிதிகளாகத்தானே இருக்க முடியும்?

அதுதான் இன்றையத் தமிழகத்தின் அரசியல் நிலை. ஆக்கம் கெட்ட நாடு அடிமை மந்திரிகள்

கல்லார் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை - 570

என்கிறது ஒரு குறள். இதன் பொருள்

முட்டாள்களால் தேர்ந்தெடுக்கப்பெற்று மூடர்களால் ஆளப்படும் ஓர் அரசாங்கத்தைப் போல் நிலத்தின் பொறுமையைச் சோதிக்கும் கொடுமையான செயல் வேறில்லை என்பதாகும்.

பொறுமை இழந்த பூமி குலுங்காமல் என்ன செய்யும்?

சென்னையில் பூமி அதிர்ச்சி என்ற செய்தியால் திருக்குறளை உணர்ந்தவனுக்கு வியப்போ அதிர்ச்சியோ என்படி ஏற்படும்?

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும். நஞ்சை உண்டவன் சாகத்தான் வேண்டும். தவறான முடிவெடுத்தவன் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்.

மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர் - 278

என்பது ஒரு குறள். இதன் பொருள்

மனத்தில் உள்ள அழுக்கை நீக்கினால் மட்டுமே பாவம் நீங்கி இறை அருளையோ, இறை அனுபவத்தையோ பெற முடியும். அதை விட்டுவிட்டு கங்கை, பம்பை, மகாமகக் குளம் போன்று புண்ணியத் துறைகளில் நீராடினால் பாவம் போகும் என்று எண்ணி வீணாகும் பேதையர் உலகில் ஏராளம் என்பதாகும்.

இதையே

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
பொங்கு தண்குமரிப்பெருந்துறை ஆடிலென்
ஒங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே

என்கிறது தேவாரம்.

தமிழ்நாட்டிலோ, அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்களே மகாமகக் குளத்தில் நீராடி மக்ககளைச் சாகடிக்கிறார்கள். மண்சோறு உண்பது, வேப்பிலை கட்டி ஆடுவது, குருவாயூரப்பனுக்கு யானை, வக்ரகாளிக்கு ரத்தம் என்பது போல் அருவருப்பான மூடிச்சடங்குகள் செய்வதில் முன்னோடியாய்த் திகழ்கிறார்கள்.

மன்னன் எவ்வழி, அவ்வழி மக்கள அறிந்தோ அறியாமலோ ஆட்சியாளர்கள் மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்சிறார்கள்.

எனவே ஓர் அறிவுப்பூர்வமான ஆட்சியாளன் எப்படி இருக்கவேண்டும் என்பதை முதலில் நன்கு தெரிந்து கொள்ளவேண்டம். அதையே இந்த நூலில திருக்குறளின் வழி விளக்கியுள்றோம்.

மக்களாட்சித் தத்துவத்தில் யார் வேண்டுமானாலும் ஆட்சியாளனாய் மாறலாம். எனவே எல்லோரும் இதைப் படித்துப் பார்த்துத் தங்களை அணியம் செய்து கொள்ள வேண்டும். நாட்டை அறிவாளிகள் ஆட்சி செய்ய வேண்டும். அதுவே இந்த நூலின் வழி நாம் தெரிவிக்க விரும்பும் செய்தி.

ந்ன்றியுடன்.

அன்பன்
இராம. கனகசுப்புரத்தினம்
பதினாறு கவனகர்.


--------------------------------------------------------------------------------------------


வானமே நம் எல்லை

கடையை விரித்துள்ளோம் கொண்டு பயன் பெறுக...

இந்த உலகில் யானை, புலி, சிங்கம் என்று மனிதனை விட ஆற்றல் மிக்க விலங்கினங்கள் எத்தனையோ உள்ளன. ஆனால் அவற்றில் எதுவும் மனிதனை வெற்றி கொள்ள முடியவில்லை. இந்த உலகின் ஆதிக்கம் மனித இனத்தின் கையில் உள்ளது.

காரணம், உயிரினங்களுக்கு வாய்க்கும் அறிவு இரண்டு வகை 1. மரபு வழி வாய்க்கும் இயற்கையான அறிவு - Genetic Knowledge. 2. தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதால் வளர்க்கும் செயற்கை அறிவு - Somatic knowledge.

விலங்கினங்கள் இயற்கையாய் வாய்த்த முதல் வகை அறிவோடு நின்று விட்டன. Only Genetic knowledge.

ஒலி - ஒலியை ஒழுங்குபடுத்தி மொழி மொழியின் வடிவமாய்ச் சித்திரங்கள் எழுத்துகள் எழுத்துகளின் வழியே கருத்துகள் கருத்துகளைத் தாங்கி நிற்கும் நூல்கள்.

இப்படிப் பரம்பரை பரம்பரையாய் அறிவைப் பகிர்ந்து கொண்டு வளர்ந்து கொண்டே வந்ததால் மனித இனம் மட்டும் உயர்ந்தது. மற்ற உயிரினங்களை வெற்றி கண்டது.

மனித இனத்திலும் க்ல்வியின் வழி அறிவையும், அறிவின் வழி விழிப்புணர்வையும் தொடர்ந்து வளர்த்துக் கொண்ட நாடுகள் மட்டுமே உலகில் இன்று செல்வாக்குள்ள நாடுகளாய்த் திகழ்கின்றன. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்றவை இந்த வரிசையில் உள்ளன.

அவ்வாறு அறிவையும் விழிப்புணர்வையும் வளர்த்துக் கொள்ளாத நாடுகள் அனைத்தும் தொடர்ந்து வறுமையில் வாடும் ஏழை நாடுகளாய் உள்ளன. அந்த வரிசையில் முதல் உடத்தில் இருப்பது நம் இந்தியா. நம்மைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்காள தேசம், இலங்கை போன்ற நாடுகள் இந்த வரிசையில் அடுத்தடுத்து நிற்கின்றன.

ஒரு காலத்தில் எல்லோரும் உள்ளே வர ஆசைப்பட்ட புண்ணிய பூமியாக நம் தமிழ்நாடும் இந்தியாவும் இருந்திருக்கலாம். இன்று அப்படியல்ல. அப்பட்டமாய்ச் சொன்னால் வளர்ந்த நாடுகள் அருவருப்பாய்ப் பார்க்கும் பாவப்பட்ட பூமியாய் நம் நாடு இருக்கிறது என்பதுதான் உண்மை.

இந்தப் பாவப்பட்ட நாடுகளின் மக்களை செல்வாக்குள்ள நாடுகள் மதிப்பதே இல்லை. சில நாடுகள் நம்மை உள்ளே அனமதிப்பது கூட இல்லை.

வாழத் தெரியாதவர்கள் வாழும் நாட்டில், அளத் தெரியாதவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்கிறார், யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி.

தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயாக்கியன் என்றால், தேர்ந்தெடுத்தவன் முட்டாள் என்று அர்த்தம் என்றார் பகுத்த்றிவுப் பகலவன் தந்தை பெரியார்.

மறைந் தனித்தமிழ் அரிமா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் நம் உலகச் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு நம் மண்ணில் காலடி வைத்ததும் சொன்ன கருத்து இது இறைவன் என்ற ஓவியன், தன் தூரிகையை வண்ணங்களில் ‍தோய்த்து ஆசை ஆசையாய் வரைந்த அழகிய வண்ண ஓவியங்களே ஐரோப்பா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், போன்ற நாடுகள். வரைந்து களைத்த நிலையில் கிண்ணத்தில் மீந்திருந்த வண்ணங்களைக் கழுவிக் கொட்டியதில் படிந்த தறைகள்தான் நம் நாடு.

ஏன் இந்த இழிநிலை என்ன இல்லை நம்மிடம்

1. தெளிந்த அறிவில்லை - Lack of wisdom.

2. பொறுப்புணர்வில்லை - Lack of responsibility.

3. விழிப்புணர்வில்லை - Lack of awareness.

வெட்கத்துடன் நாம் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை நிலை இது.

எனவ இந்த மண்ணில் நாம் இழுந்த பெருமையை மீட்க வேண்டுமென்றால், வரக்கூடிய தலைமுறைக்காவத அறிவையும் பொறுப்புணர்வையும் விழிப்புணர்வையும் ஊட்ட வேண்டியது மிக மிகத் தெவையான பணியாகும்.

என் தந்தை திருக்குறள் பெ. இராமையா அவர்கள் விட்டுச் சென்ற திருக்குறள் பணியைத் தொடர வேண்டி இலக்கிய வீதி இனியவன் அவர்களால் தூண்டப் பெற்று பதினாறு கவனகம் (சோடச அவதானம்) என்கிற நினைவாற்றல் கலை நிகழ்ச்சியை நடத்தத் தொடங்கினேன்.

இந்நிலையில் நாற்பது நாள் மலேசியப் பயணம் வாய்த்தது. அருமைச் சகோதரர் இலக்கிய வீதி இனியவன் அவர்கள் தன்னம்பிக்கை பாலசுப்பிரமணியம் அவர்கள் மூலம் இந்த நல்வாய்ப்பை உருவாக்கி உதவினார்.

மலேசிய மண்ணில் தன்னம்பிக்கைப் பயிற்சி வகுப்புகள் நடத்தி, தமிழ் மக்கள் பலரைக் கோடீசுவரர்கள் ஆக்கிய பெருமைக்குரியவர், தன்னம்பிக்கை பாலசுப்பிரமணியம் அவர்கள். உலகில் உள்ள தமிழர்கள் அனைவரையும் பணக்காரர்களாக்க வே்ணடும் என்பது இவரது கணவு. தன்னம்பிக்கை பாலா அவர்களின் இந்தக் கனவை நனவாக்க வேண்டி அவருடன் இணைந்து www.intamm.com என்று உலகில் உள்ள தமிழர்களுக்காக ஒரு கணிணி இணையத்தை (Web Site) உருவாக்கி மிகப்பெரிய அறிவுப் புரட்சியை நிகழ்த்தி வருபவர், மாணவர் நகலகம் திரு. சா. அ. சவுரிராசன்.

மனமே மாபெரும் ஆற்றல் என்கிற என்னுடைய பயிற்சி வகுப்பை, அழகாக வடிவமைத்துக் கொடுத்த பெருமை இவர்களுக்கே உரியது.

நீடித்த வாழ்க்கை Living Longer.

நலம்மிக்க வாழ்க்கை Living Healthier

மகிழ்ச்சியான வாழ்க்கை Living Happier

அறிவும் விழிப்புணர்வும் உள்ள வாழ்க்கை Living with wisdom and awareness.

என்ற நான்கு நோக்கங்களை மையமாக வைத்து நடத்தப்பெறும் பயிற்சி வகுப்பு இது. இந்த நூலும் இந்த நோக்கங்களை மையமாக வைத்தே வடிவமைக்கப் பெற்றது.

ஏற்கனவே பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு இந்நூல் வழிகாட்டும் கையேடாக அமையும். மற்றவர்களுக்கு வாழ்ககை ப்றிறய விழிப்புணர்வை ஊட்டும் தூண்டுகோலாக அமையும்.

கடையை விரித்துள்ளோம்.
கொண்டு பயன் பெறுக.

அன்பன்
இரா. கனகசுப்புரத்தினம்
பதினாறு கவனகர்.-------------------------------------------------------------------------------------copyright © kavanagar muzhakkam
Powered by JKS Info-Tech